Results for "Tamilcinema"
ஆண்ட்ரியா மீது செம கடுப்பில் இருக்கும் கமல் ஹாஸன்

விஸ்வரூபம் 2 படம் தொடர்பாக கமல் ஹாஸன் நடிகை ஆண்ட்ரியா மீது கோபத்தில் உள்ளாராம். 
viswaroopam2_movie_latest_stills-tamilgossip.in

கடந்த 2013ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு படம் வெளியானது. படத்தின் நாயகனான கமல் ஹாஸன் நாட்டை விட்டே வெளியேறுவது பற்றி எல்லாம் பேசினார்.

அந்த படத்தின் 2 பாகம் எடுக்கப்பட்டு வந்தது. 90 சதவிகித பணிகள் முடிந்த நிலையில் நிதி நெருக்கடியால் படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 பட வேலைகளை மீண்டும் துவங்க திட்டமிட்டுள்ளார் கமல். 

ஆண்ட்ரியா நடித்துள்ள காட்சிகளை பார்த்த கமலுக்கு அவரின் நடிப்பில் திருப்தி இல்லையாம். இதையடுத்து கமல் ஆண்ட்ரியாவை அணுகி மீண்டும் அந்த காட்சிகளில் நடிக்குமாறு கூறியுள்ளார். ஆண்ட்ரியாவோ மீண்டும் நடித்துக் கொடுக்க மறுத்துவிட்டாராம். இதனால் உலக நாயகன் ஆண்ட்ரியா மீது செம கடுப்பில் இருக்கிறாராம்.

Tamil Gossip Monday, December 5, 2016
முதல்வருக்காக ஷூட்டிங்கை நிறுத்தினாரா அஜித்

இன்று தமிழ் சினிமா மட்டுமல்லாது உலகில் பலருக்கும் நடிகன் என்பதையும் தாண்டி நல்ல குணம் கொண்ட மனிதர் என்ற பெயரை வாங்கியவர் அஜித்.
thala-57-shooting-stop-for-cm

ஒரு நேரத்தில் இவரை கிண்டல் செய்தவர்கள் இன்று அவரை பாராட்டி ஒரு முன்னுதாரணமாக கொண்டு வாழ்கிறார்கள்.
தற்போது அஜித் முதல்வரின் உடல் நிலை பற்றிய செய்தியை கேள்விப்பட்டு வருத்தம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது பல்கேரியாவில் இருக்கும் தல 57 படக்குழு ஷூட்டிங்கை எடுக்க மனமில்லாமல் சென்னைக்கு திரும்பி வருவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயலலிதா, அங்கு வந்திருந்த அஜித்தை பார்த்து நீங்க பைக், ரேஸ் என நிறைய ரிஸ்க் எடுக்கிறீங்களாமே?
உங்களை நம்பி குடும்பம் இருக்கிறது. குழந்தைகள் இருக்கிறார்கள் என அவர் மிக அக்கறையுடன் அறிவுரை சொன்னதாக தகவல்.
இதனால் அஜித்க்கு முதலமைச்சர் மீது ஒரு தனி பிரியம் இருக்கிறது.

Tamil Gossip
எனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது சுருதிஹாசன்

நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்துள்ள பேட்டி வருமாறு
believe-in-God-Shruti-Haasan-tamilgossip.in

“எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. கடவுள் மீது இருக்கும் பக்தி சாதாரண நிலைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பிட்ட சாமிதான் என்று இல்லாமல் அனைத்து சாமிகளையும் கும்பிடுகிறேன். எனக்கு கடவுளை வழிபடுவதற்கு யாரும் சொல்லித் தரவில்லை. வீட்டில் பூஜை அறை கூட கிடையாது. ஆனாலும் தானாகவே கடவுள் நம்பிக்கை வந்து விட்டது. எப்படி கடவுள் பக்கம் ஈர்க்கப்பட்டேன் என்று எனக்கே தெரியவில்லை.

எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கோவில்களுக்கு போகிறேன். புண்ணிய ஸ்தலங்களையெல்லாம் சுற்றி வருகிறேன். கோவிலுக்குள் எந்த சாமி இருக்கிறார் என்றெல்லாம் பார்ப்பது இல்லை. வழிபாட்டு ஸ்தலங்களை பார்த்தாலே கும்பிட்டு விடுவேன். படப்பிடிப்புகளுக்கு வெளியூர் செல்லும்போதெல்லாம் அங்கு இருக்கும் கோவில்களுக்கு சென்று விடுகிறேன். ஏராளமான கோவில்களில் சாமி கும்பிட்டு இருக்கிறேன்.


சாமி கும்பிடும் போதெல்லாம் கடவுளிடம் வேண்டியது என்ன என்று கேட்கின்றனர். எனக்கு எந்த வேண்டுதலும் இல்லை என்றால் அது பொய் சொல்வதுபோல் ஆகி விடும். எனக்கும் சின்ன சின்ன வேண்டுதல்கள் இருக்கிறது. சாமி கும்பிடும்போது அவற்றை நினைத்துக் கொள்வேன். ஆனாலும் கடமைகளை செய்வதில் தயக்கம் கூடாது. சும்மா இருந்துவிட்டு எல்லாவற்றையும் கடவுள் செய்ய வேண்டும் என்று கருதினால் அது சரியல்ல. கடமைகளை செய்து முடிக்க வேண்டும். முடிவை கடவுளிடம் விட்டு விட வேண்டும்”

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

சுருதிஹாசன் ‘சி-3’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தந்தை கமல்ஹாசனுடன் ‘சபாஷ்நாயுடு’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது. பவன்கல்யாண் ஜோடியாக ‘காட்டமரயடு’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். 

Tamil Gossip
படங்கள் தோல்வி அடைந்தால் நான் துவண்டு போகிறேன்: தமன்னா

நடிகை தமன்னா மும்பையில் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு
tammana-sad-in-my-film-tamilgossip.in

நான் சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கில் நடித்த முதல் படம் தோல்வி அடைந்தது. ஆனால் அடுத்து வந்த ஹேப்பி டேஸ் வெற்றிகரமாக ஓடி எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது. பாகுபலி படத்தில் நடித்த பிறகு எல்லோரும் என்னை திரும்பி பார்த்தனர். இவ்வளவு உயரத்துக்கு வந்த நான் சிறு வயதில் இருந்து பயணப்பட்டு வந்த தூரங்களை நினைவுபடுத்தி பார்க்கும் போது வியந்து போகிறேன்.

எனது தந்தை கப்பலில் வேலை செய்ததால் அதிக நாட்களை கடலிலேயே கழித்தார். அதன்பிறகு அந்த வேலையை விட்டு விட்டு நகை வியாபாரத்தில் இறங்கினார். அம்மாவும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து நான் பிறந்ததும் எனக்காக வேலையை விட்டுவிட்டார். அவருடைய தியாகம் எப்போதும் என் மனதில் இருக்கிறது. பள்ளியில் படித்தபோது நாடகமொன்றில் நடித்தேன். அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு நாடக குழுவில் சேர்ந்தேன்.

நடிப்பவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து யோகா கற்க ஆரம்பித்தேன். நான் படித்த பள்ளிக்கு நடிகை ராணிமுகர்ஜி உள்பட நிறைய திரையுலக பிரபலங்கள் வந்தனர். அவர்களை பார்த்து நடிப்பில் எனக்கு மேலும் தீவிரமான பற்று ஏற்பட்டது. எனது அம்மாவும் நீ ஒரு நாள் மிஸ் இந்தியா ஆவாய் என்று பேசி வந்தார். தொடர்ந்து நடிப்பு பயிற்சி எடுத்தேன். நடனமும் கற்றேன். அதன்பிறகு முழு நேர நடிகையாகி விட்டேன்.


தென்னிந்திய மொழிகளில் நிறைய படங்களில் நடித்து விட்டேன். சினிமாவில் வெற்றி-தோல்வியை சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பலர் சொல்வதை கேட்டு இருக்கிறேன். அது யாராலும் முடியாது. வெற்றியில் சந்தோஷப்படுவதும் தோல்வியில் கவலைப்படுவதும் மனிதர்களுக்கு உள்ள இயற்கையான குணம். நான் நடித்த படம் தோல்வி அடைந்தால் எப்படி வருத்தப்படாமல் இருக்க முடியும். எனது படங்கள் தோல்வி அடையும் போதெல்லாம் நான் துவண்டுபோகிறேன்.

கஷ்டப்பட்டு நடித்தும் சரியாக போகவில்லையே என்ற வேதனை இருக்கும். வெற்றி வரும்போது பலருக்கு கர்வம் ஏற்படும். ஆனால் அனுபவம் வரவர அது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.”

இவ்வாறு தமன்னா கூறினார். 

Tamil Gossip Saturday, December 3, 2016
வேலையில்லாப் பட்டதாரி 2: முக்கிய வேடத்தில் கஜோல்

தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கப்போவதாக தனுஷ் கடந்த மாதம் அறிவித்தார். 

vip2-act-kajal-tamilgossip.in

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் 'வேலையில்லாப் பட்டதாரி-2' வை தனுஷின் மைத்துனி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க அனிருத், ஷான் ரோல்டன் இருவரும் இசையமைக்கிறார்கள்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை கஜோல் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாகவும், இதற்காக அவருக்கு 4 கோடிரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் கஜோல் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் கடைசியாக 19 வருடங்களுக்கு முன் வெளியான 'மின்சார கனவு' படத்தில் கஜோல் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil Gossip
சல்மான்கானுடன் காதலா?: எமிஜாக்சன் பதில்

எமிஜாக்சன் முன்பு இந்தி நடிகர் பிரத்தீக்பாபரை காதலித்ததாக கூறப்பட்டது. 
amy-jackson-loves-salmankhan-tamilgossip.in

இப்போது, சல்மான்கானை காதலிப்பதாக இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுபற்றி எமிஜாக்சன் கூறியதாவது:-
‘‘நான் தற்போது தனியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். யார்தான் சல்மான்கானை ‘டேட்’ செய்யமாட்டேன் என்பார்கள்? சல்மான் எனது நல்ல நண்பர். எனக்கு நம்பிக்கை அளிப்பவர். ஒரு நண்பராக பாலிவுட்டில் வழிகாட்டி வருகிறார். சல்மான்கான் எவ்வளவு அழகாக உடலை பராமரித்து வருகிறார். அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். 
சல்மான் தற்போது அவரது உடல் எடையை ஒரே மாதத்தில் 20 கிலோ குறைத்திருக்கிறார். எப்படி இது முடிந்தது என்று ‘2.0’ இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த அவரிடம் கேட்டேன். அந்த அளவு தன்னை அருமையாக பராமரிக்கிறார். நட்புடன்தான் பழகுகிறேன்’’.

Tamil Gossip Friday, December 2, 2016
ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

‘மனிதன்’ படத்துக்கு பிறகு கதை கேட்டு வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்து வருகிறார்.


3-films-act-Udhayanidhi-Stalin-tamilgossip.in

இதில் எழில் இயக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. இது உதயநிதி ஸ்டாலின் சொந்தமாக தயாரிக்கும் படம். மற்றொன்று ‘பொதுவாக எம் மனசு தங்கம்’. இது அறிமுக இயக்குனர் தளபதி பிரபு இயக்கும் படம். இதை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவை தவிர லைகா படநிறுவன தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதை கவுரவ் இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டனர். ஏற்கனவே உதயநிதி நடிப்பில் வெளியான ‘மனிதன்’ படம் ரஜினி பட தலைப்பு. இப்போது நடிக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’ ரஜினி பேசிய வசனம். ‘பொதுவாக என் மனசு தங்கம்’ ரஜினி பாடல் வரிகள். எனவே பெயர் சூட்டப்படாத படத்துக்கும் ரஜினி தொடர்பான பெயர் வைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Tamil Gossip
பட அதிபர் மதன் மீண்டும் சிறையில் அடைப்பு

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’ வாங்கித் தருவதாக கூறி 127 மாணவ-மாணவிகளிடம் ரூ.84.27 கோடி மோசடி செய்ததாக பட அதிபர் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகியிருந்த அவர் கடந்த மாதம் 21-ந் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
film-producer-madhan-back-to-jail

திருப்பூரில் அவரது தோழி வர்ஷா வீட்டில் பதுங்கியிருந்தபோது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரை 9 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. நேற்றுடன் விசாரணை முடிவடைந்தது. நேற்று காலை 10.30 மணியளவில் மதன் சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மாஜிஸ்திரேட்டு பிரகாஷ்குமார் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் மதனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் மீண்டும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


போலீஸ் விசாரணையில் மாணவ-மாணவிகளிடம் பணம் வசூலித்ததை மதன் ஒப்புகொண்டுவிட்டார். வசூல் செய்த பணத்தில் 80 சதவீதத்தை எஸ்.ஆர்.எம். நிறுவனத்திடமும், அதன் தொடர்புடைய நிறுவனங்களிடமும் ஒப்படைத்துவிட்டதாக மதன் போலீஸ் காவல் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கை பொறுத்தமட்டில் பாதிக்கப்பட்ட 127 மாணவ-மாணவிகளிடமும் உரிய பணத்தை கண்டிப்பாக பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Tamil Gossip
தொடர்ந்து படங்கள் தயாரிக்கும் விஷ்ணு விஷால்
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலின் கான்பிடென்ட் லெவல் அதிகரித்துள்ளது.
vishnu-vishal-continued-produced-movie-tamilgossip.in
சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாவீரன் கிட்டு டிசம்பர் 2 திரைக்கு வருகிறது. முருகானந்தம் இயக்கத்தில் அவர் தயாரித்து நடித்துவரும் கதாநாயகன் திரைப்படம் அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியாக உள்ளது.
இதுதவிர முண்டாசுப்பட்டி ராம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். அத்துடன் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியர் செல்லா அய்யாவு இயக்கும் படத்தை தயாரித்து நடிக்க உள்ளார்.
இனி தொடர்ச்சியாக படங்கள் தயாரிப்பது என்ற முடிவை விஷ்ணு விஷால் எடுத்துள்ளார்.

Tamil Gossip
ஆக்‌ஷன் இறங்கிய சந்தானம்

காமெடி வேடங்களில் நடித்துவந்த சந்தானம், ஓடி ஓடி உழைக்கணும் படம் மூலம் முதன்முதலாக ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.
santhanam-next-movie-action-hero-tamilgossip.in

கே.எஸ்.மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்தில் ஆக்‌ஷனில் கலக்கி வருகிறாராம் சந்தானம். சமீபத்தில் படத்தில் வில்லனாக நடிக்கும், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுடன் சந்தானம் மோதும் காட்சியை படமாக்கினர்.
தேர்ந்த ஆக்‌ஷன் நடிகரைப் போல் துள்ளிக் குதித்து சந்தானம் நடித்ததாக படக்குழு கூறியது. சந்தானம் கராத்தேயில் பிரவுன் பெல்ட் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Gossip
பெங்களூரு ரியல் எஸ்டேட் அதிபரை மணக்கிறார் அனுஷ்கா
நடிகை அனுஷ்காவுக்கு 35 வயது ஆகிறது. 2005-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
anushka-marriage-news-tamilgossip.in


 இரு மொழிகளிலும் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார். சம்பளம் ரூ.2½ கோடி கேட்கிறார். வயதானதால் இளம் நடிகர்களுடன் அவரால் ஜோடியாக நடிக்க முடியவில்லை. இதனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.

அனுஷ்காவை பல கதாநாயகர்களுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. நடிகர்கள் ஆர்யா, நாகார்ஜுனா ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார். ஆந்திராவில் உள்ள வயதான தொழில் அதிபர் ஒருவரை மணக்கப்போகிறார் என்றும் கூறப்பட்டது.

இந்தநிலையில் தற்போது அவரது பெற்றோர்கள் பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ஒருவரை மணமகனாக தேர்வு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது.


இந்த தொழில் அதிபர் அனுஷ்கா குடும்பத்தினருக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என்று கூறப்படுகிறது. இவர் பெங்களூருவிலும் ஐதராபாத்திலும் சொந்தமாக கோடிக்கணக்கில் சொத்துக்கள் வைத்து இருக்கிறாராம். அனுஷ்காவுக்கும் ரியல் எஸ்டேட் அதிபருக்கும் அடுத்த வருடம் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விட அனுஷ்கா திட்டமிட்டு உள்ளார். தற்போது அவரது கைவசம் சி-3, பாகுபலி-2, பாக்மதி, ஓம் நமோ வெங்கடேசாய ஆகிய 4 படங்கள் உள்ளன. திருமணத்துக்கு முன்பு இந்த படங்களை முடித்து கொடுத்து விட முடிவு செய்துள்ளார். வேறு புதிய படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை. 

Tamil Gossip Thursday, December 1, 2016
என்னை வியக்க வைத்த ரஜினிகாந்த்

மதராச பட்டனம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
amy-jackson-rajinikanth-enthiran2-news-tamilgossip.in


தற்போது ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கிறார்.

இந்தி நடிகர் சல்மான்கானுடன் எமிஜாக்சனுக்கு நெருக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்துள்ளன. ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம், சல்மான்கான் கிசுகிசுக்கள் பற்றி மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற எமிஜாக்சனிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

“ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். அந்த படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடும் நிகழ்ச்சியை சமீபத்தில் மும்பையில் நடத்தி முடித்தனர். அந்த விழாவுக்கு செல்வதற்கு முன்னால் நானும் ரஜினிகாந்தும் ‘2.0’ படப்பிடிப்பில் முக்கிய காட்சி ஒன்றில் நடித்துக்கொண்டு இருந்தோம்.

அப்போது அவரிடம் ‘2.0’ படவிழாவில் கலந்து கொள்ளப்போவதை நினைத்து நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், ‘எமி நான் நிஜமாகவே அந்த விழாவை நினைத்து மிகவும் பதற்றமாக இருக்கிறேன். ஊடகங்கள் கவனிக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்ளும்போதெல்லாம் இந்த பதற்றம் எனக்கு வந்து விடுகிறது.’ என்றார். நான் அவரிடம், நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார். எனவே அப்படி பதற்றப்படக்கூடாது என்றேன்.


அதற்கு அவர் அது உண்மைதான். ஆனாலும் எனக்கு பதற்றம் வருகிறது என்றார். இதன்மூலம் ரஜினிகாந்த் எந்த அளவுக்கு பணிவான மனிதர் என்பதை அறிய முடியும். எல்லோரிடமும் ஆத்மார்த்தமாக பழகுவார். அவருடைய பணிவான நடவடிக்கைகளை பார்த்து நான் வியந்து போகிறேன்.

சல்மான்கானை எல்லோருக்குமே பிடிக்கும். நான் யாரையும் காதலிக்கவில்லை. இந்தியில் கட்டுக்கோப்பாக உடலை வைத்துள்ள நடிகர் யார் என்று கேட்டால் அக்‌ஷய்குமார் என்பேன். அவர் உடலை நன்றாக வைத்துக்கொள்ள கடும் உடற்பயிற்சிகள் செய்கிறார்.”

இவ்வாறு எமிஜாக்சன் கூறினார். 

Tamil Gossip
‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
bairavaa-movie-shooting-finish-tamilgossip.in

விஜய் நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, சரத் லோகித்சவா, சதீஷ், அபர்ணா வினோத், பாப்ரி கோஷ், மைம் கோபி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். 

60-க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான விஜய புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது. இதையடுத்து தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற விருக்கிறது. விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர்.

Tamil Gossip
ரஜினி - விஜய் திடீர் சந்திப்பு

பரதன் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் “பைரவா”. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
rajini-vijay-meeting-news-tamilgossip.in

விஜயா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். “பைரவா” படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இறுதி நாள் படப்பிடிப்பு சென்னை எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரி வளாகத்தில் நடந்து முடிந்தது.
படப்பிடிப்பு நிறைவு நிகழ்ச்சியில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ரஜினியின் ‘2.0’ படப் பிடிப்பும் இதே இடத்தில் நேற்று நடந்தது. இதில் ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. 
இதை அறிந்ததும் விஜய் ‘2.0’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று ரஜினியை சந்தித்தார். இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். ரஜினி ‘2.0’ படத்தில் வரும் ‘கெட்-அப்’பில் இருந்தார். எனவே, புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.
விஜய் ஏற்கனவே ரஜினியின் “அண்ணாமலை” படத்தை ‘ரீமேக்’ செய்யப் போவதாகவும், அதில் விஜய் நடிக்க விரும்புவதாகவும் முன்பு தகவல்கள் வெளியாகின. அது போன்ற திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது. இப்போது ரஜினியை விஜய் திடீர் என்று சந்தித்து பேசி இருப்பதால் “அண்ணாமலை” ரீமேக் அனுமதி தொடர்பாக அவர் பேசி இருக்கலாம் என்று மீண்டும் ரசிகர்களி டம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tamil Gossip
முத்துராமலிங்கம் படத்தின் மொத்த கதையையும் போட்டு உடைத்த இயக்குனர்
கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘முத்துராமலிங்கம்’. இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்கி வருகிறார். இளையராஜா இசையமைக்கிறார். 

muthuramalingam-movie-news-tamilgossip.in


இப்படத்தில் நெப்போலியன், பிரியா ஆனந்த், வம்சி கிருஷ்ணா, விவேக், சுமன், பெப்சி விஜயன், சிங்கம் புலி, சிங்கமுத்து என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் கதையை பற்றி இயக்குனர் கூறும்போது, கதாநாயகன் முத்துராமலிங்கத்தின் தந்தை சிலம்பம் கற்று தரும் பள்ளி நடத்தி வருபவர். ஒரு சமயம் திருநெல்வேலியில் நடக்கும் சிலம்பம் போட்டியில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அதில் கதாநாயகன் எதிரிகளை தாக்குகிறார்.

இதனால், வில்லன் காவல்துறையில் புகார் செய்ய, கைது செய்ய வரும் காவல் துறை அதிகாரிக்கும், கதாநாயகனின் தந்தைக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன்பிறகு, தந்தையோடு தலைமறைவாகிறார் கதாநாயகன். இவர்களை கைது செய்ய வரும் தனிப்படை போலீஸ் அதிகாரி அவர்களை பிடிக்கும் முயற்சியில் தோல்வியடைகிறார். 

கதாநாயகனோடு சிலம்பம் சண்டை செய்து ஜெயித்தால் அவனை கைது செய்யலாம் என கதாநாயகி சவால்விட, இந்த போட்டியில் அதிகாரியும், கதாநாயகனும் களம் இறங்குகிறார்கள். அதில் கதாநாயகன் வெற்றியடைந்து ஊரையும் தந்தையின் மானத்தையும் காப்பாற்றுகிறார். இதுதான் படத்தின் மொத்த கதை என்று கூறுகிறார்.

படத்தில் காவல்துறை அதிகாரியாக வம்சி கிருஷ்ணாவும். அவருக்கு சிலம்பம் பயிற்சி கொடுப்பவராக பெப்சி விஜயனும், மேலும், கவுதம் கார்த்திக்கின் அப்பாவாக நெப்போலியனும் நடித்துள்ளனர். இப்படத்தின் நாயகி ப்ரியா ஆனந்த் +2 படிப்பவராக வருகிறார். படம் முழுக்க பாவடை, தாவணியில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் முத்துராமலிங்க தேவரைப் பற்றிய ஒரு பாடல் உள்ளது. அந்த பாடலை கமல்ஹாசன் பாடிக் கொடுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. 

அதனால், படத்தில் உள்ளவர்கள் அனைவரும் நெல்லை தமிழில்தான் பேசுவார்களாம். மேலும், அங்கு நடக்கும் சிலம்பம் சண்டையையும் இப்படத்தில் மையப்படுத்தி காட்டியிருக்கிறார்களாம். சிலம்பம் கற்றுக் கொள்வதற்காக மிகுந்த சிரத்தை எடுத்து கற்றுக் கொண்டுள்ளார் கவுதம் கார்த்திக்.

Tamil Gossip Tuesday, November 29, 2016
குயின் ரீமேக்கில் தமன்னா

பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘குயின்’. 
Tamannah-acting-in-queen-remake-tamilgossip.in

இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன் வாங்கியிருந்தார். இந்நிலையில், இப்படத்தை ரேவதி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுதவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் கங்கணா ரணாவத் நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்? என்ற பெரிய கேள்வி எழுந்து வந்தது. அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 


இப்படம் ரீமேக்காக இல்லாமல் தமிழுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களையும் செய்யவிருக்கிறார்களாம். திருமணத்திற்கு முதல் நாள் நாயகியின் திருமணம் நின்றுபோக, தனது தேனிலவிற்கு வாங்கிய டிக்கெட்களை எடுத்துக் கொண்டு கதாநாயகி வெளிநாடு போகிறாள். அந்தப் பயணத்தில் ராணியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, மீண்டும் இந்தியா திரும்பும் நாயகி திருமணம் குறித்து எடுக்கும் முடிவு ஆகியவை தான் படத்தின் கதை.

கடந்த 2014ம் ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருது இப்படத்திற்கு கிடைத்தது. மேலும் இப்படம் ரூ. 110 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது.

Tamil Gossip
டூப் இல்லாமல் சந்தானம் போட்ட அதிரடி ஸ்டண்ட் காட்சி

‘தில்லுக்கு துட்டு’ படத்திற்கு பிறகு சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். 
santhanam-stunt-idea-news-tamilgossip.in

அதன்பின்னர், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட இயக்குனர் கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ‘அனேகன்’ பட நாயகி அம்ரியா தஸ்தூர் நடித்து வருகீறார்.

மேலும், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமி நாதன், ஊர்வசி, மன்சூர் அலிகான், மயில்சாமி என ஒரு நகைச்சுவை பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. இப்படத்திற்காக சமீபத்தில் சென்னையில் அதிரடியான ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. 


இந்த சண்டைக் காட்சியில் வில்லனாக நடிக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுடன் சந்தானம் மோதுவது மாதிரியான ஒரு சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளனர். இதில் டூப் இல்லாமல் மேலிருந்து கீழே தலைகீழாக தொங்கியும், மிக உயரத்திற்கு ஜம்ப் செய்தும் நடித்து யூனிட் ஆட்களின் கைதட்டலை பெற்றுள்ளார். சந்தானம் கராத்தேவில் பிரவுன் பெல்ட் வாங்கியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கத. 

இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்

Tamil Gossip
ஹிப்ஹாப்பின் மீசையை கத்தரித்த சர்ச்சை

மீசையை முறுக்கு படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. படத்தில் இசையும் அவர்தான்.
hip-hop-tamizha-movie-banned-news-tamilgossip.in

இந்தப் படத்தில் இடம்பெறும் சேட்ஜி எனத் தொடங்கும் பாடலை யூடியூபில் வெளியிட்டிருந்தனர். சேட்ஜி என்பது ஒரு சாதியை குறிக்கிறது என்று சர்ச்சையை கிளப்பிவிட்டனர் (இதெல்லாம் ஒரு விஷயமா?).
சாதி என்று சொன்னாலே சாட்டையை சொடுக்கிற அளவில்தான் நமது சமூகம் மொண்ணையாக உள்ளது. வேறு வழியில்லாமல் அந்தப் பாடலை யூடியூபில் இருந்தே தூக்கிவிட்டார் ஹிப்ஹாப் தமிழா.
பாடல் படத்தில் இடம்பெறுமா?

Tamil Gossip Monday, November 28, 2016
ரீ- எண்டரி: மச்சான்ஸை மறந்த நடிகை நமீதா

மச்சான்ஸ் என்று இனி ரசிகர்களை அழைக்க மாட்டேன் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
machan-forget-namitha-tamilgossip.in

தமிழ் சினிமாவில் மச்சான்ஸ் என்றால் அது நமீதா என்று ரசிகர்களுக்கு தெரியும், மச்சான்ஸ் அவரின் அடையாளம் என இருந்தது. சில படங்களின் தோல்வி மற்றும் தொழில் காரணமாக சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்த நடிகை நமீதா, புலிமுருகன் படத்தின் மூலம் ரீ எண்டரி கொடுத்துள்ளார். மேலும் படவாய்ப்புகள் குவிந்து வருவதால் நமீதா மகிழ்ச்சியில் உள்ளார். ரசிகர்களை மச்சான்ஸ் என்று அன்புடன் அழைத்து வந்த நமீதா இனி அந்த வார்த்தையை பயன்படுத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், தன் பெயரில், போலி சமூக வலைதள கணக்குகள் இருப்பதை அறிந்த நமீதா, அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில், அவர் கூறியிருப்பதாவது: என்னை விரும்பும், பின் தொடர நினைக்கும் சமூக வலைதள ரசிகர்கள், போலி கணக்குகளை கண்டு ஏமாற வேண்டாம். குறிப்பாக, namitha kapoor என்ற பெயரில் உள்ள, பேஸ்புக் கணக்கு என்னுடையது அல்ல; Namitha vankawala என்பதே, என் பேஸ்புக் கணக்கு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tamil Gossip
சமூக சேவையில் தான் மனஅமைதி கிடைக்கிறது

நடிகை சமந்தா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு
samantha-social-service-in-online-tamilgossip.in

ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஆதரவு இல்லாத ஏழைகளுக்கு ஒதுக்கி அவர்களுக்கு உதவ வேண்டும். சமூக சேவைகளில் நிறைய பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள் அந்த பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூகத்தில் எல்லோருமே சம்பாதிக்கிறார்கள். சிலருக்கு லட்சங்களிலும், இன்னும் சிலருக்கு கோடிகளிலும் வருமானம் வருகிறது.

சம்பாதிக்கும் தொகை அனைத்தும் தனக்கே சொந்தம் என்று நினைப்பது சுயநலம். அந்த பணத்துக்கு மதிப்போ மரியாதையோ கிடையாது. அதில் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பதில்தான் பொது நலமும் சந்தோஷமும் இருக்கிறது. சமூகத்தில் நிறைய மக்கள் அடிப்படை வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை தூக்கி விட வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.


1 கோடி ரூபாய் சம்பாதித்தால் அனைத்தையும் தானே சாப்பிட வேண்டும் என்று சுயநலமாக சிந்திக்காமல் ஏழைகளுக்கும் கொடுத்து உதவ வேண்டும். அப்படி உதவினால்தான் தன்னிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு உயரும். சமூக சேவைகள் செய்யும் போது கிடைக்கும் திருப்தியே தனி. மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதில் கிடைக்கும் சந்தோஷத்தை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்.

ஏழைகள் பசியை தீர்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை. சமூக சேவைகளில்தான் எனக்கு மன அமைதி கிடைக்கிறது. உதவிகள் செய்யும் போது தான் நம் மீதே நமக்கு அளவு கடந்த மரியாதை ஏற்படுகிறது. இந்த விஷயத்தை நான் தெரிந்து வைத்து இருப்பதால் தான் சமூக சேவைகளில் ஆர்வமாக ஈடுபடுகிறேன்.”

Tamil Gossip Saturday, November 26, 2016