பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம், பாகுபலி - தி கன்க்ளூஷன் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று ராஜமௌலி கூறியுள்ளார்.
இந்திய அளவில் அதிகம் வசூலித்த பாகுபலியின் இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஏப்ரல் 28, 2017 படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் இரு பாடல் காட்சிகளும், சில உரையாடல் பகுதிகளும் மட்டுமே படமாக்கப்பட வேண்டும், அவை டிசம்பருக்குள் முடிவடைந்துவிடும் என ராஜமௌலி கூறியுள்ளார்
No comments