துப்பாக்கி 2 விரைவில்

இளைய தளபதி விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி என இரண்டு வெற்றி திரைப்படங்களைக் கொடுத்தவர் ஏ. ஆர். முருகதாஸ்.
thuppaki-2-next-vijay-movie-tamilgossip.in


நேற்றுடன் துப்பாக்கி திரைப்படம் திரைக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.
விஜய் ரசிகர்கள் இதை டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர்.
இந்த ரசிகர்களுடன் முருகதாசும் இணைந்து டுவீட் செய்து, துப்பாக்கி படத்தின் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தார்.

இதனிடையே ஜி. வி. பிரகாஷ், தனக்கு பிடித்த திரைப்படம் துப்பாக்கி என்றும், விரைவில் துப்பாக்கி 2 திரைப்படத்தை முருகதாஸ் இயக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு முருகதாஸ் உடனடியாக, துப்பாக்கி 2 திரைப்படம் விரைவில் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டு, ஜி. வி. பிரகாஷ்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

No comments