குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகம் நடக்கின்றன

அரசியல்வாதியான பிறகு நமிதாவின் பார்வை விசாலப்பட்டிருக்கிறது. அல்லது விசாலப்பட்டதால் அரசியலுக்கும் வந்திருக்கலாம். 
namitha-speak-to-sexual-act-tamilgossip.in

சாயா படத்தின் விழாவில், படத்தையொட்டி சில கருத்துகளை உதிர்த்தார் நமிதா. ஒவ்வொன்றும், ஏற்கனவே விவாதிக்கப்பட்டு வருபவை என்றாலும், முக்கியமானவை.
சாயா திரைப்படம் குழந்தைகளை அப்பா, அம்மா எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து பேசுகிறது. இதனை முக்கியமாக குறிப்பிட்ட நமிதா, “எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆம், நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன் எனக்கு அவங்கதான் குழந்தைகள். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக்கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும்
கவனித்துக்கொள்கிறேன்” என்றார். அத்துடன் பாலியல் சீண்டல்கள் குறித்தும் கவலை தெரிவித்தார்.
“ஒரு விஷயம், ஆனால் இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்கிறேன். இன்று பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன. நம் அருகிலிருந்து கூட நடக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது. நல்ல டியூஷன் மட்டும் கொடுத்தால் போதாது. நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். எது நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும், அதாவது குட் டச் எது, பேட் டச் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்றார்.
குழந்தைகளிடம் அம்மா, அப்பா இருவரும் நிறைய பேச வேண்டும், குழந்தைகள் சொல்வதை கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் நமிதா.

No comments