இப்படி ஒரு பாடல் இருக்குமா தல-57ல் வெளிவந்த தகவல்

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வந்த வேதாளம் படத்தை இயக்கியதும் சிவா தான்.

அந்த படத்திற்கு அனிருத் தான் இசை, அதேபோல் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் அஜித் படத்திற்கும் அனிருத் தான் இசை.
இவர் இன்று ரெமோ படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்க்க வந்தார், அப்படி வருகையில் தல-57 குறித்து கேட்டனர்.
அதற்கு அவர் ‘இந்த படத்தில் ஆலுமா டோலுமா பாடல் போல் இருக்குமா என்று தற்போது சொல்ல முடியாது, மேலும், அந்த பாடல் ப்ளான் செய்து ஹிட் அடிக்கவில்லை.
அதே மாதிரி இந்த படத்திலும் பாடல்களுக்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறோம், நீங்களே கேட்டு சொல்லுங்கள்’ என கூறியுள்ளார்.

No comments