அஜித்துக்கு மனைவியாக நடித்தவருக்கு ஏற்பட்ட திடிர் அதிர்ச்சி

பிரபலங்களை அதிர வைக்கும் வதந்திகள் அவ்வப்போது வந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் குடும்பமே கதி என்று வாழும் நடிகையை பற்றி இப்படி சொன்னால் பொங்க மாட்டாரா என்ன.
ajith-kumar-latest-news-kisukisu-tamilgossip.in

அந்த நடிகை வேறுயாருமில்லை 2002 இல் பிரசன்னாவுக்கு ஜோடியாக அறிமுகமான கனிகா தான். தமிழில் தொடங்கி தெலுங்கு, கன்னடம் என சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
2006 இல் வெளியான வரலாறு படத்தில் அஜித்துக்கு மனைவியாக காயத்திரி கதாபாத்திரத்தில் நடித்தவர்.
தொழிலதிபர் ஷியாம் ராதாகிருஷ்ணனை திருமண செய்தபிறகு அமெரிக்காவில் சிலகாலம் செட்டிலாகி வாழ்ந்து வந்தார். இவருக்கு 5 வயதில் ரிஷி என்ற மகனும் உள்ளனர்.
இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்கிறார் என்ற வெளியான வதந்தியை கேள்விப்பட்ட கனிகா, நான் என் கணவர் மற்றும் மகனுடன் சந்தோசமாக சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
வதந்தி பரப்புவதற்கு முன் என்னிடம் கேட்டிருந்தால் நான் சொல்லியிருப்பேன் என்று கூறினார்.

No comments