அதர்வா படத்தில் பாதியிலே வெளியேறிய ஆனந்தி

புதிய இயக்குனர் இளவரசு இயக்கும் படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. 
anandhi-kisu-kisu-movie-news-tamilgossip.in

அம்மா கிரியே‌ஷன்ஸ், 2 எம்பி பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக ஆனந்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, பிரணீதா ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டது.
இதன் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து ஆனந்தி விலகி இருக்கிறார்.
இவருக்கு பதிலாக அதிதி என்ற புதுமுக நாயகியை நடிக்க வைத்திருக்கிறார்கள். கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஆனந்தி படத்தில் இருந்து விலகி விட்டதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். முக்கியத்துவம் இல்லாத வேடம் என்பதால் அவர் விலகி விட்டார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

No comments