சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதிவ்யா ஜோடி ஒரு நேரத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் சேர்ந்த இந்த ஜோடி காக்கி சட்டை படத்திலும் தொடர்ந்தது.
திரிஷா இல்லனா திவ்யா என்ற டயலாக்களும் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இதனால் இந்த ஜோடி மீண்டும் தொடருமா என மிகவும் எதிர்பார்ப்பை தூண்டியது.
பிறகு சிவகார்த்திகேயன் ஹன்சிகாவுடன் நடித்தாலும், கீர்த்தி சுரேஷுடன் நடித்தது எல்லோருக்கும் பிடித்த ஜோடியானது. தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இது பற்றி ஸ்ரீ திவ்யாவிடம் கேட்ட போது கதைக்கேற்றபடி இயக்குனர்கள் நடிகர், நடிகைகளை தேர்வுசெய்கிறார்கள். அவர்களுக்கு யார் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்கள் என்பது தெரியும்.
எனக்குரிய கதைக்களம் கிடைக்கும்போது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நிச்சயம் நடிப்பேன் என்று ஸ்ரீ திவ்யா தெரிவித்துள்ளார்.
No comments