இளம் இயக்குனருக்கு வாய்ப்பு தந்த விஜய்

தற்போது பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதை முடித்த பின்பு அட்லீயுடன் அடுத்த படம், அதற்கடுத்து செல்வராகவனோடு மற்றொரு படம் என அடுத்த வருடம் முழுவதும் பிஸி தான்.

இந்நிலையில், தற்போது ரத்னசிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்துள்ள றெக்க படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை பார்த்த இளையதளபதி விஜய் உடனே இயக்குனரை அழைத்து ஒரு கதையை கேட்டுள்ளார். கதையை கேட்டுவிட்டு விரைவில் பதில் சொல்வதாக கூறி அனுப்பிவைத்தாராம்.
அதனால் தற்போது விஜய்61 படத்தை இயக்கப்போவது அட்லீயா இல்லை ரத்னசிவா'வா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

No comments