தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து, அவருக்கு சிகிச்சையளித்து வரும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுவரும் அறிக்கைகள் குழப்பத்தை அதிகரித்துக் கொண்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம், 22ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு நீர்சத்து இழப்பு, ஜுரம் என்றுதான் காரணம் கூறப்பட்டது. இப்படித்தான் தனது முதல் அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டது. இரண்டாவது அறிக்கையில், அவர் நல்ல உணவு உட்கொள்கிறார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்று அறிக்கையளிக்கப்பட்டது. அதேநேரம், ஜெயலலிதா சில தினங்களில் வீட்டுக்கு அனுப்பப்படுவார். அதன்பிறகு அலுவல்களை பார்க்க முடியும் என்று அப்பல்லோ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது
லண்டன் மருத்துவர் அப்பல்லோ அளித்த மூன்றாவது மருத்துவ அறிக்கையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் மருத்துவ சிகிச்சை அளிக்கிறார். ஜெயலலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள நோய் தொற்றுக்கு ரிச்சர்ட் சொன்ன அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
எதற்கு அந்த டாக்டர் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சினைக்கு எதற்காக, லண்டன் டாக்டர் வந்துள்ளார் என்று அதிமுக தொண்டர்கள் மற்றும், பொதுமக்களுக்கு பல்வேறு ஐயங்கள் எழத் தொடங்கின.
இன்பெக்ஷன் இருப்பதாக கூறியது அப்பல்லோவின் இரண்டாவது, மூன்றாவது மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதா அப்பல்லோவில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனவும், அதிலும் குறிப்பாக மூன்றாவது அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று என குறிப்பிட்டுள்ளது. இது கூடுதல் தகவலாகும். இன்பெக்ஷன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தாலும், எந்த மாதிரி இன்பெக்ஷன், அதன் தீவிரம் என்ன என்பதை தெரிவிக்கவில்லை.
செயற்கை சுவாசம் சுவாசப் பிரச்சினை இருப்பதால்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. மெல்லமெல்ல, ஜெயலலிதா பெறும் சிகிச்சைகளை அப்பல்லோ வெளியிட தொடங்கியுள்ளது இரு வகையான விவாதங்களை கிளப்பியுள்ளது.
விரைவில் வீடு திரும்ப வேண்டும் ஆனால், அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுவரும் அறிக்கைகளை கவனிப்போருக்கு ஒரு விஷயம் புரியும். முதல் இரு அறிக்கைகளிலுமே, ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என குறிப்பிட்டு வந்த அப்பல்லோ, கடந்த இரு அறிக்கைகளில், அவர் மருத்துவமனையில் மேலும் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்றுதான் தெரிவித்துள்ளது. எனவே ஜெயலலிதா எப்போது வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்பதில் அப்பல்லோ குழம்பியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும். அடுத்த அறிக்கையில் அடுத்த சில நாட்களிலேயே ஜெயலலிதா வீடு திரும்ப வேண்டும் என்று அப்பல்லோ குறிப்பிட வேண்டும் என்பதே அனைவரது வேண்டுதலும் ஆகும்.

No comments