கூலியாக, கண்டக்டராக தன் வாழ்க்கையை தொடங்கி எந்த பின்புலமும் இன்றி போராடி இன்று உலகளவில் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படுவர் ரஜினிகாந்த். இந்திய அரசியல் அதிகாரமே தேடி வந்து பார்க்கும் அளவுக்கு வளர்ந்ததுக்கு காரணம் அவரது உழைப்பு.
அவரது வாழ்க்கை எல்லா காலகட்டங்களிலும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். ஒரு சினிமாவுக்கே உண்டான பரபரப்பும் விறுவிறுப்பும் சுவாரஸ்யமான சம்பவங்களும் நிறைந்திருக்கும்.
அப்படிபட்ட ரஜினியின் வாழ்க்கை வரலாறை அப்பாவிடமே கேட்டு தொகுத்துக்கொண்டிருக்கிறார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா.
ஸ்டாண்டிங் ஆன் ஆப்பிள் பாக்ஸ் என்ற பெயரில் உருவாகும் அந்த புத்தகத்தில் ரஜினியின் ஆரம்பகால பெங்களூர் வாழ்க்கை, குடும்பம், சினிமா, நண்பர்கள் எதிரிகள் என எல்லாமே தொகுக்கப்படுகிறது. இதை அப்படியே படமாக்கலாம் என்ற ஐடியாவிற்கு இப்போது வந்திருக்கிறார்கள். கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.டோணியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து அது இந்தியாவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
அது போல ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக்கினால் அது உலகம் முழுதுமே வரவேற்பு பெறும். எடுக்கும் படத்தை டாகுமெண்ட்ரியாக மட்டுமே எடுக்காமல் பயோபிக் படமாக எடுக்கலாம் என்று யோசிக்கிறார்கள். அப்படி படமாக்கினால் அதை சௌந்தர்யாவே இயக்க வாய்ப்புள்ளதாம்.

No comments