அஜித், விஜய்க்கு அடுத்த இரட்டை நட்சத்திரங்கள் யார்

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி கமல், அஜித் விஜய் என சினிமாவில் இரட்டை நட்சத்திர பிரபலங்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மட்டுமல்ல ஊடகங்களும் ஆவலாக இருக்கின்றன.

போட்டிகள் அதிகம் தான். ஆனால் இப்போதைய அளவுக்கு போட்டிகள் அப்போது இல்லை. கதாநாயகனாக நடிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவு.
அதற்காக மற்ற நடிகர்களும் திறமையற்றவர்கள் என்று சொல்ல முடியாது. தற்போதைய சூழ்நிலைகள், வெளிவரும் படங்கள், காமெடி யுத்திகள், மக்களை கவர்ந்தவர்கள் எனப் பார்க்கும் போது அஜித் விஜய்க்கு அடுத்த படியாக விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனை ரசிகர்கள் அதிகம் சொல்கிறார்கள்.
இதற்கு காரணம் பல இருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பெரிய திரைக்கு வந்த சிவா நிறைய சாதித்து தனித்து நின்றவர். விஜய் சேதுபதி ஒரு சப்போர்டிங் ஆக்டராக படத்தில் நடிக்க துவங்கினாலும் இடை விடாத முயற்சியால் திறமையான நடிகராக முன்னிற்பவர்.
தற்போது இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் படங்கள் என்று வரும் ஆரோக்கிய போட்டி இருப்பது சகஜம் தானே. இதற்கு நேற்று வெளிவந்த இவர்களது படங்களும் சாட்சி.
இந்த வருடத்தில் சிவா 2 படங்களில் நடித்திருந்தாலும் இரண்டுமே முதல் நாள் நல்ல வசூல். ரெமோவும் நல்ல ஹிட் ஆகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதிக்கு சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என ஆறு படங்கள் வெளிவந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தொடரும் இவர்களை பற்றிய பேசுச்சும், சாதனைகளும் இவர்களை தான் அஜித் விஜய்க்கு அடுத்த படியாக நிறுத்த போகிறது என்று ஆணித்தனமாக சொல்கிறார்கள்

No comments