கண்ட படங்களில் நடிக்கமாட்டேன்! காஜல் அகர்வால் பேட்டி

அஜித்துடன் தல 57 படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் கலக்கி கொண்டிருக்கும் பிரபல நடிகை.
kajal-agarwal-next-movie-news-tamilgossip.in

விஜய்யுடன் கத்தி, சூர்யாவுடன் மாற்றான், விஷாலுடன் பாயும் புலி, தனுஷுடன் மாரி என பல படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு பிரபலங்கள் பலருடன் நடித்த இவர் என்னை சீனியர் நடிகைகள் என்று எல்லோரும் சொல்வதால் பொறுப்பு அதிகமாகிவிட்டது என சமீபத்தில் கூறியிருந்தார்.
சினிமாவிற்கு வந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. கிடைத்த வாய்ப்புகளை கொண்டு இதுவரை நடித்ததால் சில விஷயங்களில் என்னை சமாதானம் செய்துகொள்ள வேண்டி இருந்தது.
இனி கண்ட படங்களில் நடிப்பதை விட ஆழமான கதை, ஹீரோயினை மையப்படுத்திய கதாபாத்திரங்கள் என முக்கியத்துவம் கொடுத்து நடிக்க போகிறேன்.
அதிரடி படங்களில் நடித்து சண்டை போட வேண்டும் என்ற ஆசை உள்ளது. இயக்குனர்கள் எனது ஆசையை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

No comments