தீபாவளிக்கு களமிறங்கும் தனுஷின் கொடி Kodi Movie Deepavali Release

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'தொடரி' படம் கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியானது. ரயிலில் நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
Kodi Movie Poster

இதனை தொடர்ந்து , துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் முதன்முதலாக அண்ணன்-தம்பி என இரட்டை  வேடத்தில் நடித்துள்ள 'கொடி' படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் தனுஷுடன் திரிஷா, அனுபமா ஜோடியாக நடித்துள்ளனர். அரசியல் பின்னணி கொண்ட கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை தனுஷ்  தயாரித்து நடித்துள்ளர். 

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் செப்டம்பர் 28-ந்தேதி வெளியாக இருப்பதாக தனது ட்டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் 'கொடி' படம்  தீபாவளிக்கு வெளியாகயிருப்பதையும் அவர் உறுதி செய்துள்ளார்.  விரைவில் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் புதிய படத்தையும் தனுஷ் தயாரிக்க உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

No comments