ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் படமாக்கியிருந்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை எழுதியுள்ளார்.இப்படத்திற்கான நடிகர், நடிகையர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலில் மகன் பிரணவ்-விடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஏற்கெனவே, பிரணவ்-க்கு மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதுகூட அதில் எல்லாம் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
முதல் படம் என்பதால் அந்த படத்திலேயே பிரணவ் தனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டி இருக்கிறதாம். அதுதவிர, அவருக்கு நடிப்பைவிட இயக்குனர் ஆவதற்குத்தான் விருப்பமாம். அதனாலேயே எந்த படவாய்ப்புகளையும் அவர் ஏற்கவில்லையாம். சவுந்தர்யா படத்திலும் நடிக்க மறுத்ததற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, ரஜினியிடம் இந்த கதையை பற்றி விவாதித்துள்ளார் சவுந்தர்யா. தனுஷ் அமைத்துள்ள கதை, தனுஷுக்கே பொருத்தமாக இருக்கும் என்றும், அவரையே ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று சவுந்தர்யாவுக்கு ரஜினி பரிந்துரை செய்துள்ளாராம். எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
No comments