மனதோடு ப்ரேமம் பாருங்கள் சமந்தா Samantha Ruth Prabhu

ஏற்கனவே மலையாளத்தில் ரிலீஸ் ஆகி நீண்ட நாட்கள் ஓடி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட படம் ப்ரேமம். தற்போது தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் சுருதி ஹாசன் ஜோடி நடிக்க நேற்று வெளியாகியுள்ளது.

அழகான காதல் கதை கொண்ட இப்படத்தை தற்போது நாக சைதன்யாவை திருமணம் செய்ய போகும் சமந்தா எல்லோரையும் படம் பார்க்க சொல்லியிருக்கிறார்.
ட்விட்டரில் பதிவிட்ட அவர், திறந்த மனதோடு இப்படத்தை பாருங்கள், நாகா அடுத்த லெவலுக்கு முன்னேறி இருக்கிறார். நல்ல கதை மற்றும் நடிப்பு, ரசிகர்கள் நீண்ட நாள் ரசிப்பார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளார்.
பட குழுவுக்கு வாழ்த்துக்களை சொன்னதோடு சைதன்யா மீதான தன காதலை சிம்பாலிக்காக வெளிப்படுத்தி இருக்கிறார்.

No comments