பிரபல நடிகருடன் ஸ்ருதி காதலா?

இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் விளம்பர படங்களில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தகவல் பரவியது. ஏற்கனவே ரன்பீர் கபூர், நடிகை கேத்ரினா கைப்பை காதலித்ததுடன், அவருடன் லிவிங் டூ கெதர் பாணியில் ஒரே வீட்டில் வாழ்ந்தும் வந்தார்.
shruti-hassan-love-news-tamilgossip.in


 இதற்கு ரன்பீர் தந்தை ரிஷிகபூர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் மாஜி காதலி தீபிகா படுகோனுடன் புதிய படமொன்றில் ரன்பீர் சேர்ந்து நடித்தார். அதில் நெருக்கமான முத்தக்காட்சிகளில் நடித்ததுடன் நைட் பார்ட்டிகளிலும் கலந்துகொண்டார். இது கேத்ரினாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ரன்பீருடனான காதலை பிரேக் அப் செய்துகொண்டு விலகினார்.

காதல் தோல்வியில் இருந்த சமயத்தில்தான் ரன்பீருடன் விளம்பர படங்களில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஸ்ருதிக்கு கிடைத்தது. அவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டார். இதையடுத்து இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியானது. இதுபற்றி மவுனம் காத்து வந்த ஸ்ருதி தற்போது பதில் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது,’இதுபோன்ற வதந்திகளை கேட்பதற்கு எனக்கு நேரம் இல்லை. 

எனது வேலையில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகிறேன். மற்றபடி கிசுகிசுக்களில் எனது கவனத்தை செலுத்துவதில்லை’ என்றார். வதந்திகளிலிருந்து விலகி இருக்கும் ஸ்ருதி ஹாசன் தற்போது சிங்கம் 3, சபாஷ் நாயுடு மற்றும் தெலுங்கில் ஒரு படம் என 3 படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்த பிரேமம் படம் ஹிட்டாகி அவரது கையை உயர்த்தி இருக்கிறது.

No comments