சூர்யாவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

சூர்யா தற்போது ‘எஸ்-3’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்கவுள்ளார். 
suriya-keerthi-suresh-next-movie-news-tamilgossip.in

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படத்திற்கு கதாநாயகி தேடுதல் படலம் தீவிரமாக நடைபெற்று வந்தது. இப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைப்பதாக பேச்சு எழுந்தது. ஆனால், நயன்தாரா இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. பின்னர், கீர்த்தி சுரேஷிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷையே இப்படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.


பாலிவுட்டில் அக்ஷய்குமார், அனுபம் கேர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக்தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’. பாலிவுட்டில் சூப்பர், டூப்பர் ஹிட்டான இப்படத்தை தமிழில் சில மாற்றங்கள் செய்து உருவாக்கவுள்ளார் விக்னேஷ் சிவன். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

சூர்யா தற்போது ‘எஸ்-3’ படத்தில் பிசியாக நடித்து வருவதால், அவர் சம்பந்தமில்லாத காட்சிகளை மட்டும் முதலில் படமாக்கவுள்ளதாக கூறப்பபடுகிறது. சூர்யா ‘எஸ்-3’ படத்தை முடித்தபிறகு இந்த படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments