பிரபுதேவா, விஷால், கார்த்தி முக்கூட்டணியின் கருப்பு ராஜா வெள்ளை ராஜா

இந்தியில் இயக்கிய ரா… ராஜ்குமார், ஆக்ஷன் ஜாக்சன், சிங் இஸ் பிளிங் படங்கள் தொடர் தோல்வியை தழுவ, தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் பிரபுதேவா
vishal-karthi-next-movie-plan-in-prabhudeva-tamilgossip.in

தேவி படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ரீ என்ட்ரியானவர், விரைவில் விஷால், கார்த்தி இணையும் படத்தை இயக்குகிறார்.
பிரபுதேவாவின் திரும்பிவருகை சிறப்பாக உள்ளது. அவர் நடித்த தேவி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் தயாரித்திருக்கும் சில சமயங்களில் படம் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இன்னொரு படமான போகன் – கதைத் திருட்டு விவகாரத்தில் சிக்கினாலும் – படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்நிலையில் விஷால், கார்த்தியை வைத்து, கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற படத்தை இயக்க உள்ளார். படத்தை யார் தயாரிப்பது, நாயகிகள் யார், எப்போது படப்பிடிப்பு போன்ற விவரங்களை விரைவில் வெளியிட உள்ளனர்.

No comments