பாகுபலி முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ம் பாகம் வேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாகுபலி-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் 360 டிகிரி வீடியோ ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் படத்தில் போர்க் காட்சி ஒன்றை அதன் க்ராஃபிக்ஸ் டிசைனர் இணையத்தில் லீக் செய்துள்ளார். அதன்படி, 8 நிமிடங்கள் அடங்கிய இந்த வீடியோ எடிட் செய்யப்படாத வெர்ஷன் என்று கூறப்படுகிறது.
இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த அந்த க்ராஃபிக்ஸ் டிசைனர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இணையதளத்தில் லீக் செய்யப்பட்ட காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன.
No comments