கீர்த்தி சுரேஷை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சமாக உயர்ந்துள்ளது


இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் இரண்டே வருடங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார்.
keerthy-suresh-crosses-5-million-followers-tamilgossip.in

சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்', 'ரெமோ' ஆகிய படங்கள் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் இவருக்குக் குவிந்து வருகின்றன.

விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'பைரவா' 2017-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. தொடர்ந்து சூர்யா ஜோடியாக 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் கீர்த்தி சுரேஷை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சமாக உயர்ந்துள்ளது.இதற்காக கீர்த்தி சுரேஷ் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். 

No comments