வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் அறிமுகமாகி சென்னை 28 சத்தம் போடாதே ,திருடன் போலீஸ் உள்பட பல படங்களில் நடித்தவர் நிதின் சத்யா.
இவர் தற்போது ‘பிளாஸ்’ கண்ணனோடு இணைந்து, ‘பிரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
இந்த நிறுவனத்தின் சார்பில் நிதின் சத்யா தயாரிக்கும் முதல் படத்தை அறிமுக இயக்குநர் நந்தா மணிவாசகம் இயக்குகிறார். பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள் பூஜையுடன் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவா ஸ்டுடியோஸ் கே.கணேஷ், இயக்குனர் வெங்கட் பிரபு, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், நடிகர் விஜய் வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் ஆனது பற்றி நிதின் சத்யா கூறும்போது, திரைப்பட உலகில் இன்றியமையாததாக இருப்பது வெள்ளிக்கிழமை. அதனால் தான் எங்கள் நிறுவனத்திற்கு பிரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட் என்ற பெயரை தேர்ந்தெடுத்தோம். வலுவான கதைக்களமும், சிறந்த கதையம்சமும் கொண்ட தரமான படங்களை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன் என்றார்.
No comments