தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களான ரஜினியும் - கமலும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் நேரில் சந்தித்து கொள்வது கோலிவுட்டில் அரிதான ஒன்றுதான்.
இந்நிலையில், இன்று ரஜினியும் கமலும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இவர்களின் சந்திப்பு நடந்துள்ளது.
கமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடிப்படியில் இருந்து கால் தவறி விழுந்ததில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். அதேபோல், ரஜினியும் ‘2.ஓ’ படப்பிடிப்பில் இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டு ஓய்வெடுத்து திரும்பினார்.
இந்த சந்திப்பு குறித்து கமல் தரப்பில் கூறும்போது, இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் இருவரும் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்று கூறுகின்றனர்.
No comments