பிச்சைக்காரன்' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படம் ‘சைத்தான்.
இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அருந்ததி நாயர் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.இந்நிலையில், இப்படம் வருகிற நவம்பர் 17-ந் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் பணத்தட்டுப்பாடு நிலவுவதால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். அதன்படி, வருகிற டிசம்பர் 2-ந் தேதி இப்படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
எனினும், படம் வெளியாவதாக சொன்ன தேதியில் ‘சைத்தான்’ படத்தின் முதல் ஐந்து நிமிடக் காட்சிகளை இணையதளத்தில் வெளியிடவிருக்கிறார்கள். இந்த காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்
No comments