வாலு பட இயக்குனருடன் கைகோர்த்த விக்ரம்

இருமுகன் வெற்றிக்கு பிறகு விக்ரம் அடுத்ததாக யார் படத்தில் நடிக்கப்போகிறார் என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. 
vikram-join-vaalu-movie-director-tamilgossip.in

ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகிவிட்டாலும், அடுத்த வருடம்தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கப்போவதாக அறிவித்திருந்தனர்.

சசிகுமாரை வைத்து ‘பிரம்மன்’ என்ற படத்தை இயக்கிய சாக்ரடீஸ் இயக்கும் புதிய படத்திலும் விக்ரம் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியானது. அதேபோல், ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் மறுபடியும் விக்ரம் நடிக்கப்போவதாக செய்திகளும் வெளிவந்தது. ஆனால், இதில் எதுவுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


இந்நிலையில், விக்ரம் அடுத்ததாக ‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை SFF என்ற பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மாறுபட்ட கதையம்சம் கொண்ட கதைக்களமாக இப்படம் உருவாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்களாம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் தலைப்பு, நாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்களை வெளியிடவுள்ளனர்.

No comments