அஜீத்தை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன் பாக்ஸ் ஆபிஸில்

சென்னை பாக்ஸ் ஆபிஸில் வேதாளத்தின் வசூலை கடந்திருக்கிறது சிவகார்த்திகேயனின் ரெமோ. 


ajith-sivakarthikeyan-box-office-news-tamilgossip.in


மூன்றாவது வார இறுதிவரை சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரெமோ 6.50  கோடிகளை வசூலித்துள்ளது.
இதே காலகட்டத்தில் அஜித்தின் வேதாளம் 6.34 கோடிகளை மட்டுமே வசூலித்தது. இந்த வார இறுதிக்குள் ரெமோ விஜய்யின் கத்தி பட வசூலையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
கத்தி மூன்று வார இறுதிவரை சென்னையில் 6.70 கோடிகள் வசூலித்திருந்தது.
ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம், ரெமோ இந்த வசூலை 237 காட்சிகளில் சாதித்துள்ளது. ஆனால், வேதாளம் வெறும் 189 காட்சிகளில் இந்த வசூலை பெற்றுள்ளது. கத்தி 165 காட்சிகள். காட்சிகள் அடிப்படையில் அஜித்தும், விஜய்யும் சிவகார்த்திகேயனுக்கு எட்டாத உயரத்திலேயே இன்னும் உள்ளனர்.

No comments