பாகுபாலியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் அதன் இரண்டாம் பாகம் கோடை விடுமுறையில் வெளிவருகிறது.
பாகுபலி 2 பஸ்ட் லுக் வெளியீ ட்டு விழா மும்பையில் நடைபெற்றது.
இதில் படத்தின் முக்கிய வில்லனான ராணாவை தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். உடனே தெலுங்கு பத்திரிகை உலகம் ராஜமௌலிக்கும் ராணாவுக்கும் எதோ பிரச்னை என்பது போன்று சித்தரிக்க தொடங்கின.
இதனையடுத்து ராணா தனது ட்விட்டர் பக்கத்தில் குறித்த நிகழ்ச்சிக்கு ஏன் வரவில்லை என்ற காரணத்தை தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தில் உள்ள சிறிய நகரத்தில் எனது புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அங்கிருந்து விமான நிலையத்துக்கு செல்லவே 3 மணி நேரம் ஆகும், ஆகையால் தான் நிகழ்ச்சியில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்றார்.
No comments