பைரவா படக்குழு பயங்கர அப்செட் ??

இளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. படத்தில் நடித்த அனைவரும் செம்ம ஹாப்பி, படம் அத்தனை நன்றாக வந்துள்ளதாம்.
ஆனால், ரசிகர்களின் ஒரு சில செயலால் படக்குழு மிகவும் அப்செட்டில் உள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து எடுத்து வருகின்றனர்.
ரசிகர்கள் படப்பிடிப்பில் போது சூழ்ந்து நிற்பது கூட பிரச்சனையில்லை, ஆனால், புகைப்படங்களை எடுத்து வெளியிடுவது மிகவும் தவறு.
அதைவிட சமீபத்தில் பைரவா படப்பிடிப்பு வீடியோ ஒன்று வெளிவந்தது படக்குழுவை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.

No comments