பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் உறையாடுவது என்பது இப்போது சாதாரண விஷயமாகிவிட்டது. டுவிட்டர், பேஸ்புக் என ரசிகர்களுடன் இணைப்பிலேயே உள்ளனர்.
அண்மையில் #AskKajal என்ற டாக்கில் காஜல் அகர்வால் தன்னுடைய ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார். அப்போது அவர் சொன்ன சில விஷயங்களை பார்ப்போம்.
ஆக்ஷன் அவதாரத்தில் நடிப்பது என்பது அவரடைய மிகப்பெரிய கனவாம்.
காஜலின் அம்மா தான் அவருக்கு ஒரு முன் உதாரணமாம்.
இவருக்கு மகதீரா, Do Lafzon Ki Kahani போன்ற படங்களில் நடித்த வேடம் மிகவும் பிடிக்குமாம்.
தல அஜித்துடன் நடிக்கும் படம் மிகவும் அருமையாக போய்க்கொண்டிருக்கிறதாம். அதோடு நல்ல கதை வந்தால் மீண்டும் விஜய்யுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
இப்போது வரைக்கு திருமணத்திற்கு வாய்ப்பே இல்லையாம்.
ராஜ்மா, பன்னீர் இவருக்கு மிகவும் பிடித்த சாப்பாடு.
காஜலின் மற்ற பெயர்கள் Kaju and Gudiya.
மணிரத்னத்தின் எல்லா படங்களும் காஜலுக்கு பிடிக்குமாம்.
No comments