கோடம்பாக்கமே கலவர பூமியாகிக் கிடந்தாலும் டென்ஷனே ஆகாமல் தன் வீட்டு ரோஜாச் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவதில், அஜீத்தின் நிதானத்திற்கு நிகர் அவரேதான்! அந்த ஹீரோ என்ன செய்கிறார்? இந்த ஹீரோவுக்கு என்ன பிரச்சனை? என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் தன் லட்சியத்தை மிக சிறப்பாக நடத்தி முடித்துவிட்டார். தன் வீட்டு பணியாளர்களுக்கு வீடு கட்டித் தருவதாக பிளான் போட்டிருந்தார் அல்லவா? அதை சிறப்பாக நடத்தி முடித்து அதில் அவர்களை பணியமர்த்தியும் விட்டார்.
அஜீத்தின் நீலாங்கரை வீட்டுக்கும், பணியாளர்கள் வீட்டிற்கும் இடையேயான தொலைவு சுமார் பத்து கிலோ மீட்டருக்கும் மேல். அதனால் தினந்தோறும் ஒரு வேன் அவர்களை அழைத்து வரவும் திரும்ப கொண்டு செல்லவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வேன் லேட்! பதறியடித்துக் கொண்டுவந்த பணியாளர்கள், அஜீத்திடம் ஸாரி கேட்டுவிட்டு தாமதத்திற்கான காரணத்தையும் சொன்னார்களாம். “நேத்து நைட் முழுக்க கரண்ட் இல்ல. சரியா தூக்கம் இல்ல. அதனால்தான்” என்று சொல்ல, பதறிவிட்டாராம் அஜீத்.
“எல்லார் வீட்டுக்கும் இன்வெட்டர் ( மின்சார பேக்கப்) போடச் சொல்லியிருந்தேனே, இன்னும் பிக்ஸ் பண்ணலையா?” என்றவர், சம்பந்தப்பட்டவர்களை அழைத்து “உடனே இன்வெட்டர் போட்ருங்க. அதுவும் என் வீட்டுக்கு என்ன பிராண்ட் போட்ருக்கீங்களோ, அதையே போடுங்க. இல்லேன்னா சார் வீட்டுல ஒண்ணு. நமக்கு வேற ஒண்ணான்னு அவங்க பீல் பண்ணிடக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.
ஜால்ரா மாதிரியிருந்தாலும் நல்ல விஷயத்தை சொல்றதுல நமக்கு ஒண்ணும் தயக்கம் இல்ல!
No comments