எவ்ளோ வேணும்னாலும் சுதந்திரமா இருங்க. ஆனால்? அட்லிக்கு விஜய் கண்டிஷன்

முன்பெல்லாம் ஹீரோவை சமாளிப்பதுதான் தயாரிப்பாளரின் பெரும் பிரச்சனையாக இருக்கும்! “ஒட்டகப் பாலில் ஒரு டீ” என்று கேட்டு முடிப்பதற்குள் ராஜஸ்தானில் கறந்து கொண்டிருக்க வேண்டும்! இல்லையென்றால் கோபம் தலைக்கேறி, இரண்டு நாட்கள் ஷுட்டிங்குக்கு லேட்டாக வந்து புரடக்ஷனுக்கு சில லட்சங்கள் ‘லாஸ்’ வைத்துவிடுவார்! இப்போதெல்லாம் ஹீரோக்கள் தேவலாம். டைரக்டர்களின் அலட்டல்தான் தாறுமாறு, தக்காளிச் சோறு!

தெறி படத்தின் அவுட்டோர் ஷுட்டிங்கில் நடந்த காமெடி இது. அங்கு விஜய்க்குதானே செக்யூரிடிகள் அதிகம் இருந்திருக்க வேண்டும்? செல்ஃபி என்பார்கள். ஆட்டோகிராஃப் என்பார்கள். தொட்டுப்பார்க்கிறேன் என்பார்கள். தூக்கிப் பார்க்கிறேன் என்பார்கள். அது ரசிகர்களின் ஆசை. அதற்காகதான் பவுன்சர்கள் என்று சொல்லப்படும் ஆள் விரட்டிகள் தேவை! ஆனால் விஜய் யாரையும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாமல் அவர் பாட்டுக்கு வேலை பார்த்திருக்கிறார்.
அதேநேரத்தில் அட்லீக்குதான் மூன்று பாடி காட்ஸ்! இத்தனைக்கும் அவரை சீண்டுவார் யாருமில்லை. இருந்தாலும், அட்லீ எங்கு நின்றாலும் அவரை சுற்றி நிற்கும் இந்த பாடி காட்ஸ், பிரதமரின் செக்யூரிடி போல சுற்றும் முற்றும் வேவு பார்ப்பது போல நடித்த கொடுமையெல்லாம் நடந்திருக்கிறது.
இப்போதுதான் அதற்கு ரீயாக்ஷன் காட்டுகிறார் விஜய். அட்லீயுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் அல்லவா? ‘அந்த படப்பிடிப்பில் நீங்க பாடி காட்ஸ் வைச்சுக்க வேணாம். பார்க்கவே சிரிப்பு சிரிப்பா வருது’ என்றாராம். வேடிக்கையாக சொல்லியிருந்தாலும், வாழைப்பழத்தில் ஊசியை செலுத்தியிருக்கிறார் விஜய். பழமே… கொஞ்சம் பத்திரமா நடந்துக்கங்க!

No comments