சண்டையால் நின்ற பாம்பு சட்டை மீண்டும் பாயத் தொடங்கியது

சதுரங்க வேட்டை படத்தை தயாரித்த மனோபாலா, பாம்பு சட்டை என்ற படத்தை பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தொடங்கினார். அறிமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்கம்.

இந்தமுறை தனது 40 வருட தோழி ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபனை தயாரிப்பில் கூட்டு சேர்த்துக் கொண்டார். நடிகர் சங்க தேர்தலில் மனோபாலா சரத்குமாருக்கு எதிர்த்த நாசர் அணிக்கு ஆதரவு தெரிவித்ததால் பாம்பு சட்டை வியாபார ஒப்பந்தம் கசமுசாவானது... படம் கிடப்பில் போடப்பட்டது.
 
தற்போது, பாம்பு சட்டையை மனோபாலா மீட்டெடுத்துள்ளார். முக்கியமாக கங்காதரன் என்பவரும், அபி அண்ட் அபி நிறுவனமும் பாம்பு சட்டையை வெளியிட முன்வந்துள்ளன. அதனால் பட வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

No comments