சைத்தான் ட்ரைலரை நீக்கினார் விஜய் ஆன்டனி

சைத்தான்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சமூக வலைத் தளங்களிலும் ஹிட்டடித்தது.
இந்த நிலையில் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவு செய்து வைத்திருந்த 'சைத்தான்' பட டீசரை திடீரென நீக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 'நான் நடித்து வெளிவர இருக்கும் 'சைத்தான்' பட டீசர் வீடியோவின் இசையில் ஒலிக்கும் மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலையின் வரிகள், சமஸ்கிருத மந்திரம் ஒன்றின் சாயலை ஒட்டி இருப்பதால் சிலர் மனவருத்ததுக்கு உள்ளானதை நான் அறிந்தேன்.
அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அந்த வரிகளை உடனடியாக மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளேன். எனது யூடியூப், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் இன்று நீங்கள் 'சைத்தான்' டீசரை காண முடியாது. புதிய வரிகளுடன் பாடல் பதிவு செய்து, நாளை மாலை 7 மணிக்கு சைத்தான் டீசரை வெளியிடுகிறேன்,' என்று கூறியுள்ளார்.

No comments