கபாலி படத்தின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் ராதிகா ஆப்தே. இவர் நடிப்பில் சமீபத்தில் 'பார்ச்டு' என்ற படம் வெளிவந்தது.
இவை அதிகாரப்பூர்வமாக வெளிவருவதற்கு முன்பே இவர் நடித்த நிர்வாண காட்சிகள் லீக் ஆனது.
இதை குறிப்பிட்டு நேற்று ஒரு நிகழ்ச்சியில் இவரிடம் கேட்க ‘நான் ஒரு நடிகை, என் தொழிலுக்கு என்ன தேவையோ அதை செய்கிறேன்.
முதலில் உலகப்படங்களை போய் பாருங்கள், நான் எதற்கும் தயங்கவில்லை. தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள்.
உங்களுக்கு நிர்வாண உடம்பை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தால் என்னுடைய வீடியோவை பார்ப்பதை விட்டுவிட்டு, உங்களையே கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று வெளிப்படையாக கூறிவிட்டார்.
No comments