பாலிவுட்டில் கவர்ச்சி நடிகை என்றாலே சன்னி லியோன் என்று சொல்லத் தெரியாத இளைஞர்கள் இருக்க முடியாது.
அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய இவர் தற்போது பேயாக உருமாறியுள்ளார். ஹிந்தியில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த ராகினி எம்.எம்.எஸ்-2 படம் தற்போது "ராத்ரி" என்று தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது.
தற்போது விறு விறுப்பாக டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கும் இப்படத்தில் ‘சாமுராய்’ புகழ் அனிதா, பர்வீன் தபாஸ், சந்தியா மிருதுல், கரண் தாலுஜா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
பூஷன் பட்டேல் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சித்ரஞ்சன் பட், மீட்பராய் அஞ்சான், யோ யோ ஹனிசிங், பிரனாய் ரிஜியா, அமர் மொஹைல் என ஐந்து பேர் இசையமைத்துள்ளார்கள்.
சன்னி லியோன் பேயாக மிரட்டுவது மட்டுமில்லாமல் பயங்கரமான கவர்ச்சி விருந்தும் தருகிறாராம். அவ்வப்போது கவர்ச்சி சாட்டையை கையிலெடுக்கும் நம்மூர் நடிகைகள் இதனால் ஷாக் ஆகிவிட்டார்களாம்.
No comments