விஜய்யுடன் மீண்டும் கைகோர்க்கிறாரா நயன்தாரா

இளையதளபதி விஜய் தற்போது தன்னுடைய முழு கவனத்தையும் பைரவா படத்தின் மீது வைத்துள்ளார்.

இந்நிலையில் இவரின் அடுத்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது, இயக்குனர் அட்லீ படத்தை இயக்கவுள்ளாராம். இதனிடையே இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் நடிக்கவுள்ளார் என்ற செய்தி முன்பு கசிந்தது.
ஆனால் அட்லீ மீண்டும் நயன்தாராவை நடிக்க வைக்கலாமா என்ற யோசனையில் உள்ளாராம், அதை பற்றியான பேச்சுக்கள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறதாம். காஜலா அல்லது நயனா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

No comments