சிவகார்த்திகேயனை விமர்சித்த ரசிகருக்கு பதிலடி தந்த மலையாள நடிகர்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது ரெமோ. மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த ஊழம் திரைப்படத்தில் நடித்த அன்சன் ரெமோவிலும் வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா சென்ற சிவா, அங்கு இருக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் அன்சனுடன் கலந்து கொண்டார். இருவரும் ஒன்றாக இணைந்திருக்கும் புகைப்படத்தை தனது முகப்புத்தகத்தில் அன்சன் பதிவு செய்ய, உடனே ஒரு ரசிகர் அன்சனை உயர்வாக பேசுவதாக நினைத்து சிவாவை விமர்சித்துள்ளார்.
"இதை நீ நிச்சயம் நம்பி, தாழ்வு மனப்பான்மை காரணமாக அடுத்த முறை இவர் உன்னுடன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்க மாட்டார், அவரை விட நீ ரொம்ப அழகு என்பது அவருக்கே தெரியும் என்று பதிவிட்டிருந்தார்.
இதை கவனித்த அன்சன் "அழகு என்பது ஒவ்வொருத்தவர் பார்வையில் மாறுபடக்கூடியது. சிவா ரொம்ப நல்லவர் , நல்ல இதயம் படைத்தவர். நாங்கள் இரண்டு பெரும் ரொம்ப தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந்த மாதிரி பேசவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

No comments