சென்னை-600028-2 படப்பிடிப்பு முடிந்தது

சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘சென்னை 28 - 2’ என்ற தலைப்பில் தயாரித்து இயக்கி வந்த வெங்கட் பிரபு.
chennai-600028-2-shooting-over-tamilgossip.in

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கில் பிறந்தநாளில், படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

கல்லி கிரிக்கெட் என்று அழைக்கப்படும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து உருவான சென்னை 28 பெரும் வெற்றி பெற்றது. இதையத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு, தன்னை இயக்குநராக்கிய சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை சொந்தமாக தயாரித்து, இயக்கி வந்தார்.
இதில், சென்னையில் இருந்து சுற்றுலாவுக்காக செல்பவர்கள், கிராமத்து இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்படி விளையாடும் சென்னை இளைஞர்கள் கிராமத்து இளைஞர்களை வென்றார்களா இல்லையா, என்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது பின்னணி வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன

No comments