சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை எடுக்கப்போவது யார்

கபாலி வசூல் வேட்டையை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட படம் 2.0 படம் இறுதிப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடிகை எமிஜாக்சன் ஷூட்டிங் முடிவடைந்ததாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
rajinikanth-next-movie-director-news-tamilgossip.in

தற்போது ரசிகர்களுக்கு குழப்பம் வந்துள்ளது. ஏனெனில் ரஜினியை வைத்து படம் எடுக்க எல்லா இயக்குனர்களுக்கும் ஆசை இருப்பதுபோல் எனக்கும் ஆசை உள்ளது என பாகுபலி இயக்குனர் ராஜமௌலி முன்பு சொல்லியிருந்தார்.
கபாலிக்கு பிறகு கலைப்புலி தாணுவின் படத்தில் மீண்டும் அவர் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.
ஆனால் தனுஷின் சொந்த தயாரிப்பில், ரஜினி நடிக்க இருப்பதாக தொடர்ந்து பேசப்படுகிறது. இதை மீண்டும் இயக்குனர் ரஞ்சித் எடுப்பார் என்று சொல்லப்படும் நிலையில் சூப்பர்ஸ்டார் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற உறுதியான தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்

No comments