சிம்பு என்றுமே மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார்.
ஆனால், இதனால் என்னமோ இவருக்கு தான் இறுதியில் கஷ்டம்.
அந்த வகையில் பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டிளித்த இவரிடம் ‘ஏன் படப்பிடிப்பிற்கு லேட்டாக வருகிறீர்கள்’ என கேட்டனர்.
அதற்கு இவர் ‘ஒவ்வொரு பள்ளியிலும் படிக்காத மாணவர் இருப்பார், அவருக்கு படிப்பு வராது, அதுபோல் தான் நானும்.
எனக்கு நேரத்திற்கு பின்னால் ஓட பிடிக்காது, மேலும், அஜித் எந்த இசை வெளியீட்டு விழாவிற்கும் வரமாட்டார்.
அவரிடம் போய் கேளுங்களேன், அதேபோல் எந்த பெண்ணையும் டி.ஆர் தொட மாட்டார், அது ஏன் என்று அவரிடம் போய் கேளுங்கள்’ என கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லாமல் ஏதேதோ கூறியிருக்கிறார்.
No comments