ஒரு மினி நடிகர் சங்கத் தலைமை போலாகிவிட்டார் சிவகார்த்திகேயன். நண்டு சுண்டு ஹீரோவிலிருந்து, நாடே வியக்கிற ஹீரோக்கள் வரை அவரது தொலைபேசிக்கு வந்து, துக்கம் விசாரிக்கிற அளவுக்கு போயிருக்கிறது நிலைமை! சிவா அழுது சில மணித் துளிகளுக்குள் அவரிடம் பேசிய ரஜினி, அவருக்கு ஆறுதலும் தேறுதலும் அட்வைசையும் சொல்லி முடித்த சில மணித்துளிக்குள் நடந்த அடுத்த சம்பவம் இது.
விஜய் அழைத்தாராம் சிவகார்த்திகேயனை. அதற்கப்புறம் அவர்கள் இருவரும் பேசியது நிறைய நிறைய என்றாலும், எழுதும்படியான விஷயங்கள் இவ்வளவுதான்.
“உங்க வளர்ச்சி என்னை பிரமிக்க வைக்குது” என்று பேச்சோடு பேச்சாக விஜய் சொல்ல, “என்ன ஒரு பெரிய மனசுப்பா இவருக்கு” என்று வியந்தபடியே தன் பேச்சை தொடர்ந்திருக்கிறார் சிவா. “வளர்ந்தால் நிறைய பிரச்சனைகள் வரும். ஆனால் எதற்கும் ரீயாக்ட் பண்ணாதீங்க. நிறைய கிசுகிசுக்கள் வரும். அதற்காகவும் டென்ஷன் ஆகக் கூடாது. சுற்றி நடப்பது எல்லாத்தையும் கவனிங்க. ஆனால் எதற்கும் வெளிப்படையாக கருத்து சொல்லாதீங்க” என்றெல்லாம் கூறிய விஜய், கடைசியாக சொன்னதுதான் சிவகார்த்திகேயனை சுற்றி நிற்கும் பிரச்சனையை சமாளிக்கும் எளிய வழி.
அப்படி என்ன சொன்னார் விஜய்?
“நிறைய தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ணுங்க! வேற வேற கம்பெனிகளுக்கு கால்ஷீட் கொடுங்க” என்பதுதான்!
சினிமாவில் பழம் தின்று கொட்டையை போட்டு, அந்த கொட்டையையும் தின்று பழம் போட்டவர் விஜய். அதை கேளுங்க. எல்லாம் சரியா நடக்கும்!
No comments