சமீபத்தில் வெளிவந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக்கில் விக்ரம்

தமிழகத்தில் ஆங்கில படங்களின் தாக்கம் தற்போது அதிகளவில் இருக்கிறது. சமீபத்தில் வெளியான Dont Breathe என்ற ஆங்கில படம் இங்கு சக்கைபோடு போட்டது.
vikram-act-hollywood-tamil-dubbed-movie-tamilgossip.in

இப்படத்தினை தமிழில் வெளியிட்ட அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுத்த ஒரு ஆங்கில படம். இந்நிலையில் இப்படத்தை பார்த்த விக்ரம், தமிழ் ரீமேக் செய்யும் எண்ணத்தில் உள்ளாராம். இதற்காக மீண்டும் இருமுகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கரை கூப்பிட்டு பேசியதாக தகவல் கசிகிறது.
மீண்டும் இப்படத்துக்கு ஏற்றார் போல் தான் உடம்பை வடிவமைக்க தற்போது ஜிம்மில் தஞ்சமிட்டுள்ளாராம். மேலும் திட்டமிட்ட படி எல்லாம் நடந்தால் டிசம்பர் மாதாமே இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறலாம் என்று நம்பக தகவல் சொல்கிறது. இதன் பிறகு தான் சாமி 2 படத்தில் நடிக்க யோசனையில் உள்ளாராம் விக்ரம்.

No comments