பிரபல இயக்குநர் மிஷ்கின் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவர் இயக்குநர் ஸ்ரீகணேஷ். தற்போது இவர் 8 தோட்டாக்கள் என்ற க்ரைம் திரில்லர் படத்தை எடுத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு திகிலான சம்பவம் நடத்துள்ளதை படக்குழு கூறியது. படத்தில் இடம் பெறும் முக்கிய கொலை சம்பவம் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக மக்கள் நடமாடும் இடத்திலே யாருக்கும் தெரியாமல் பதிவுசெய்து வந்ததாம், உடனே உண்மையில் ஒரு கொலை நடக்கிறது என்று எண்ணி மக்கள் பயந்து அலறி அடித்து கொண்டு ஓடிவந்தனர்.
அதன் பிறகு சினிமா படப்பிடிப்பு தெரிந்தவுடன் கொஞ்சம் சமாதானம் அடைந்ததாம், இது போல் படத்தில் அதிகம் ரிஸ்க் எடுத்து படப்பிடிப்பை நடத்திய காட்சிகள் அதிகம் உள்ளதாம்.
இப்படத்தின் கதாநாயகனாக வெற்றி என்ற புதுமுக நடிகர் நடிக்க, பஹத் பாசிலுடன் நடித்த அபர்ணா பாலமுரளி ஜோடியாக நடித்துள்ளார். மேலும் எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி, மெட்ராஸ் சார்லஸ் நடித்துள்ளனர். இப்படத்தை வெற்றிவேல் சரவணா சினிமாஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்ச்சர்ஸ் சார்பில் கார்த்திக் தயாரித்துள்ளனர். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் .
No comments