ரஜினிகாந்த் மும்பை புறப்பட்டார்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ என்ற தலைப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
rajini-kanth-go-mumbai-enthiran2-teaser-release-tamilgossip.in


லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். 
மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் நாளை (நவ.20) வெளியிடப்படுகிறது. இதற்காக மும்பையில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என முக்கிய புள்ளிகள் பலர் கலந்துக்கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், இன்று மும்பை புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை புறப்பட்ட ரஜினிகாந்திடம், சென்னை விமான நிலையத்தில், பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாதது, குறித்து அவர் வரவேற்பு தெரிவித்ததற்கு, எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறித்து, நிருபர்கள் கேட்டதற்கு, அவர் ஏதும் பேசாமல் விறு விறு என்று சென்றுவிட்டார்.

No comments