நான் சென்ற விமானத்தில் யாரை பார்த்தேன் தெரியுமா

நடிகை ஆண்ட்ரியா கிரிக்கெட் வீரர் டோணியை விமானத்தில் சந்தித்துள்ளார். 
andrea-see-dhoni-in-flight-tamilgossip.in

ஆண்ட்ரியா உலக நாயகன் கமல் ஹாஸனுடன் சேர்ந்து நடித்த விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. ஆண்ட்ரியா தரமணி படத்தில் நடித்துள்ளார். மேலும் தனுஷின் வடசென்னை படத்திலும் நடித்துள்ளார்.

படங்களில் பாடலும் பாடி வரும் ஆண்ட்ரியா சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் விமானத்தில் பயணம் செய்துள்ளார். 

அவர் பயணம் செய்த அதே விமானத்தில் கிரிக்கெட் வீரர் டோணியும் பயணித்துள்ளார். இதை பார்த்த ஆண்ட்ரியா நேராக டோணியின் இருக்கைக்கு சென்று அவருடன் செல்ஃபி எடுத்துள்ளார். டோணியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

No comments