விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் தனுஷ் அறிவிக்கப்போகும் முக்கிய அறிவிப்பு இதுவா?

விஜய் பைரவாவுக்கு அடுத்து என்ன படம் என்பதில் குழப்பத்தில் உள்ளார். மீண்டும் அட்லீயுடனா? என்று தெரியவில்லை. 
dhanush-vijay-latest-news-tamilgossip.in

அனால், ஒரு அரை டஜன் இயக்குனர்களிடம் செல்வராகவன் உட்பட எல்லோரிடமும் கதை கேட்டுவருகிறார்.
மாஸ் செய்தி ஒன்று வருகிறது என்று தனுஷ் ட்வீட் செய்துள்ளார். அது எது பற்றி என்று ரசிகர்கள் குழம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் தனுஷுடன் சேர்ந்து நடிக்கப்போவதுதான் செய்தியா? என்றால்… தன் அண்ணன் செல்வராகவனுடன் அடுத்த வருஷம் கடைசியில் ஒரு படத்தை தனுஷ் கமிட் பண்ணி இருக்கிறார் அல்லவா? அந்த படம் உலக சினிமா வரிசையில் இணையக்கூடிய அளவுக்கு பயங்கர பவர்புல் படம் என்று சொன்னார் அல்லவே?
அந்த படத்தில் தனுஷுடன் விஜயும் இணையலாம் அல்லது தனுஷ் தயாரிக்க,செல்வராகவன் இயக்க, விஜய் நடிக்கும் படத்தின் அறிவிப்பாகவும் இருக்கலாம்.
ஆக, வரும் புதன்கிழமை தனுஷ் வெளியிடுவதாக சொன்ன அந்த செய்தி இதுவாக இருந்தால்…விஜய், தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
இது பற்றி கேட்டபோது செல்வராகவன் மறுக்கவில்லை.  பேச்சுவார்த்தை நடக்கிறது என்று சொல்லி வருகிறார்.

No comments