90-களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த கவுதமி, கடந்த பல வருடங்களாக கணவரை பிரிந்து கமலுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் கமலை விட்டு பிரிந்து தற்போது தனது மகளுடன் தனிமையில் வசித்து வருகிறார்.நீண்ட இடைவெளிக்கு பிறகுத தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் கவுதமி தனது மகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
அதன்படி, கவுதமியின் மகளான சுப்புலட்சுமி, தனுஷ் நடிக்கவிருக்கும் வேலையில்லா பட்டதாரி 2-ம் பாகத்தில் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி காட்டுத் தீ போல பரவியது.
இதுகுறித்து விளக்கம் அறித்த கவுதமி, என்னுடைய மகள் குறித்து வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்திதான். என்னுடைய மகள் தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். நடிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
No comments