தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டவர் கீர்த்தி சுரேஷ்.
keerthy-suresh-join-telugu-superstar-tamilgossip.in


இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர், டூப்பர் ஹிட்டாகி உள்ளன. 

இந்நிலையில், விஜய்யுடன் ‘பைரவா’, சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களும் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது. 

இந்நிலையில், தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் 25-வது படத்திற்கான நாயகி தேடுதல் வேட்டை சமீபகாலமாக நடைபெற்று வந்தது. தற்போது, அப்படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை கீர்த்தி சுரேஷே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இப்படத்தை தெலுங்கு படஉலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் த்ரிவிக்ரம் இயக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார். ‘பைரவா’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கிவிட்டதால், தற்போது சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். பவன் கல்யாணுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments