சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் நயந்தாரா

நயந்தாரா மாவட்ட ஆட்சியர் வேடத்தில் நடித்து வரும் படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமல் இருந்தது.
nayanthara-movie-title-news-tamilgossip.in

நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் தலைப்பும், பஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
படத்திற்கு ‘அறம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உண்மை சம்பவம் ஒன்றை மையப்படுத்தி உருவாகும் பட்மாகும். 
அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார். ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த விக்னேஷ் - ரமேஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில், வேலு ராமமூர்த்தி, ராம்தாஸ், சுன்னு லஷ்மி, ராம்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லால்குடி இளையராஜா கலை இயக்குநராக பணியாற்ற, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்து வருகிறார்.
படம் குறித்து கூறிய இயக்குநர் கோபி நயினார், “உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி  இருப்பது தான் எங்களின் 'அறம்'. மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு பணியாற்றும் ஒரு மாவட்ட ஆட்சியரை மையமாக கொண்டு தான் கதை நகரும். எனவே தான் நாங்கள் படத்திற்கு 'அறம்' என்று தலைப்பிட்டோம். 'மாவட்ட ஆட்சியர்' என்ற வார்த்தைக்கு புதியதொரு அர்த்தத்தை தன்னுடைய அசாத்திய நடிப்பால் நயன்தாரா அவர்கள் வழங்கி இருப்பது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.
எங்கள் அறம் படத்தின் முதல் போஸ்டரை, அவர்களின் பிறந்த நாளன்று வெளியிட்டிருக்கிறோம், அதற்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது கிடைத்து வரும் அமோக வரவேற்பை பார்க்கும் பொழுது, மிகவும் பெருமையாக இருக்கின்றது. விரைவில் எங்களின் 'அறம்' திரைப்படம் மூலம் சமூதாயத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கின்றது” என்றார்.

No comments