அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘தல 57’ படம் தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 50 நாட்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படப்பிடிப்போடு 90 சதவீதம் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிடுமாம். அதன்பிறகு, சென்னையில் சில காட்சிகளை படமாக்கிவிட்டு படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறார்கள்.இப்படம் ஐரோப்பாவில் தொடங்கும்போது, அங்கு நடக்கும் சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கவனித்து வந்தார். அதன்பிறகு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற சண்டைக் காட்சிகளை வீரம் கணேஷ் கவனித்தார். தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வரும் சண்டைக் காட்சிகளை ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்கவிருக்கிறார்களாம்.
இதனால் பல ஹாலிவுட் படங்களில் புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களை பயன்படுத்தவிருக்கிறார்களாம். பாலிவுட்டில் மிகப்பெரிய பட்ஜெட்டில் சமீபத்தில் வெளிவந்த ஷிவாய் படத்திற்கு சண்டைக் காட்சிகளை அமைத்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் தல 57 படத்திற்கு சண்டை காட்சிகளை அமைத்து வருகிறார்களாம். இந்த சண்டைக் காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கும் வகையில் இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
No comments